கவிதைகள்


வீழ்த்தப்பட்ட நீதி


450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!

வரலாற்றின் சின்னமாய்
வீறுகொண்டு பயணித்த - பள்ளி
பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி
ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?

விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!

கல்லடிப்பட்ட குளம்கூட
அலை எழுப்பும் எதிர்ப்பாய்!
கலையாக நின்ற பள்ளி கல்லானபோது
பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!

நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை
காட்டில் பெற்றதே முரண்பாடு!

பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்
நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!

வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்
வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி
ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது
துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!

சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...
பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...
அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'

நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"
ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு
மூன்று பங்கு எப்படி சாத்தியம்?

விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!
விழித்திரையை சாத்தியம் என்று!
நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!
நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!

தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்
ஒரு தட்டு இறங்கிவிட்டது!

நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?
நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?

சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!
"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்
"அக்கணப் பொழுது"

ஆக்கம்:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.




தீர்ப்பு...


இந்திய தேசத்தின் தீர்ப்பா?
இல்லை!
இந்துத்துவத்தின் மீதான ஈர்ப்பு!

புராணங்களும் புரட்டுக்களும் ஆதாரமாம்!
அந்தோ!!
வரலாற்றுக்கு நேர்ந்தது அவமானம்!

சரிசம பங்கீடாம்!
இது கரிசனமா?
இல்லை களவாணித்தனமா?

அரசியல் சாசனத்தின் கல்லறை மீது
அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளது
ஹிந்துத்துவா பாசிசம்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு
கட்டுப்படவேண்டும் என
கட்டளையிடுகிறது
கபோதிகள் கூட்டம்!

சமரசம் என்ற போர்வையில்
சங்க்பரிவாருக்கு
சாமரம் வீசத்துணிந்துள்ளனர்
சமுதாயத்துரோகிகள் சிலர்!

சலசலப்புக்கு அஞ்சுவதும்
சண்டாளர்களுக்கு சல்யூட் அடிப்பதும்
சரித்திர நாயகர்களின் பண்பல்ல!

கதிகலங்கவில்லை கர்ம வீரர்கள்!
அவர்கள்
காத்திருப்பது களமிறங்கத்தான்!

எங்களின் மயான அமைதிக்கு
கோழைத்தனம் என்பது பொருளல்ல!
குமுறும் எரிமலை நாங்கள்!

அக்னி பிழம்பாய்!
சுழன்று வீசும் சூறாவளியாய்!
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாய்!
சுட்டெரிக்கும் சூரியனாய்!
கிளர்ந்தெழுவோம் ஒருநாள்!

எங்களின்
உணர்ச்சிகள் என்றென்றும்
உருக்குலையாது!



பாபரி மஸ்ஜித்..

இடித்தாயே நீ இடித்தாயே
என் இறைப்பள்ளியை இடித்தாயே;
துடித்தோமே நாங்கள் துடித்தோமே
துடியாய் துடித்து எழுந்தோமே!

தட்டிக்கேட்க ஆளில்லை என
கொட்டமடித்து சென்றாயோ;
நிமிர்ந்து நின்ற ஜனநாயகத்தை
தலைக்குனிய வைத்தாயே!

எங்களைக் கொன்றுத் தீர்த்தப்பின்னும்
பொறுமைக் காத்து நின்றோமே;
மறக்க முடியா நாளாய் ஆக்கினாய் டிசம்பர் 6’யை
எல்லாம் முடித்து பாழாக்கினாய்
இந்தியாவின் சமதர்மம் என்ற பெயரை!

அமைதியான அயோத்தியை அய்யோ ”தீ”யாக்கினவன் நீயே;
கொத்துக் கொத்தாய் கொன்றதுக்கு
வித்திட்ட பள்ளி இடிப்பு;
பொறுமையை கண நேரம் இழந்திருந்தாலும்
கண்டிருப்பாய் எங்களின் துடிப்பு!

தீர்ப்பு எப்படி வந்தாலும்
கட்டுவோம் என்ற உன் அறிவிப்பு;
திமிர் பிடித்த காவி வெறியர்களின் இறுமாப்பு!

இல்லாத கோயிலை கட்டும் உன் கற்பனையோ
அரசியல் செய்ய மத துவேஷம் விற்பனையோ;
அமைதிக்கு கட்டுப்பட்ட எங்களை சீண்டாதே
இறுதித் தீர்ப்புக்கு முன் எல்லையைத் தாண்டாதே!

இரும்பான இதயமும் இலகிடுமே
வருங்கால வசந்தமும் விட்டு விலகிடுமே;
இடித்தவனெல்லாம் தலைவனாய் இன்று
இறுதித்தீர்ப்பினால் காட்டிடுவோமே வென்று!(இன்ஷா அல்லாஹ்)

-யாசர் அரஃபாத்