Thursday, December 2, 2010

"நீதியை கோரும் பாபரி மஸ்ஜித் " - விழிப்புணர்வு பிரச்சாரம்!





பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 முதல் காந்தி கொலை செயயப்பட்ட தினமான ஜனவரி 30 வரை "நீதியை கோரும் பாபரி மஸ்ஜித் " என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது .

இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இன்று 14/11/2010 வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி படுகொலை, பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டத்தின் மூலம் நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பை தகர்த்தது போன்ற பல குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என்றும்

டிசம்பர் 10 தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் இன் தொடர்பு அம்பலமாகிக்கொண்டிருக்கும் நிலையில் சோனியா காந்தி குறித்து அநாகரிகமான முறையில் பேசிய முன்னாள் RSS தலைவரின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ளது. இது ஊடகங்களையும் மக்களையும் திசைதிருப்பும் கேவலமான யுக்தி என்று வர்ணித்துள்ளது .

1992 முதல் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் இன் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளது .



ஆல் இந்தியா இமாம்'ஸ் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம்!




டிசம்பர்-6: தொடர் முழக்க போராட்டம் -த.மு.மு.க. அறிவிப்பு!



பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலை நகர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வழிபாட்டு உரிமையை மீட்கவும் லிபரான் கமிஷன் குற்றம் சுமத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.


பாபரி மஸ்ஜித் தீர்ப்பு:உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு!

பெங்களூர்,நவ.2:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.

பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது. ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.

தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது. புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.



தி.மு.க எம்பி யின் மதவெறி!


பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கையெழுத்து போட்டு கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனுக்கு எதிராக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினரிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக பொதுமக்கள், அரசியல்வாதிகள் முதலானோரிடமிருந்து கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க, குமரி மாவட்ட பாஜக கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. இதன் ஆரம்பமாக, நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஹெலன் டேவிட்சனைச் சந்தித்து கையெழுத்து கேட்டுள்ளனர். ஹெலன் டேவிட்சனும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுகவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

விஷயம் திமுக தலைமைக்குக் கிடைத்த உடன், ஹெல்ன் டேவிட்சனிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. உடன், "ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகத் தான் கையெழுத்திடவில்லை எனவும் தொகுதி எம்பி என்ற முறையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுவைப் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தே தான் போட்டுக்கொடுத்ததாகவும்" ஹெலன் டேவிட்சன் மறுப்பு வெளியிட்டார். தொடர்ந்து குமரி மாவட்ட பாஜக தலைவர்களுள் ஒருவரான பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் வேலாயுதனும் ஹெலன் டேவிட்சன் கூறியது தான் சரி அவர் ராமர் கோவில் கட்ட கையெழுத்து ஏதும் இடவில்லை என்று மறுப்பு வெளியிட்டார்.

இம்மறுப்பு வந்த நிமிடத்திலேயே மற்றொரு பாஜக தலைவரான நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராதா கிருஷ்ணன், "ஹெலன் டேவிட்சன் எம்பி ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துத் தான் கையெழுத்து போட்டார். பாஜக தலைவர் வேலாயுதன் என்ன கூறினார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஹெலனால் திமுகவுக்கு ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்கவே அவர் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். எந்த ஒரு எம்பியாவது தன்னிடம் வழங்கப்படும் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டதற்கு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பரா? ஹெலன் இது போன்று தன்னிடம் மனுகொடுத்த எத்தனை பேருக்கு அவ்வாறு ஒப்புதல் கையெழுத்துப் போட்டுக்கொடுத்துள்ளார் என்பதைத் தெரிவிக்க முடியுமா?" என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

ஹெலன் மூலமாக மறுப்பறிக்கை வெளியிட்டு, பிரச்சனையிலிருந்து தப்பி விடலாம் எனக் கணக்குபோட்ட திமுக தலைமைக்குப் பெரும் தலைவலி தரும் வகையில், தற்போது ஹெலன் டேவிட்சன் எம்பிக்கு எதிராக குமரி மாவட்ட சிறுபான்மை மக்களிடையே எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டம் முழுவதும் அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் ஹெலன் டேவிட்சனைப் பதவி விலகக் கோரி முற்றுகை போராட்டம் நடத்தவும் சில சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
sdpi.jpg